Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000 நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக இதுவரை ரூ. 6 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று ரூ.2லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.