கடையம் அருகே 10 அடி மலைபாம்பு பிடிபட்டது
கடையம்: கடையம் அருகே பாப்பன்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. அதன் பின்புறம் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு நடமாட்டம் தென்படுவதாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கோயிலின் பின்புறம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. மலைப்பாம்பை ஆலங்குளம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் விசுவநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைகுமார், சிவமணிராஜன், மெக்கானிக் ராஜேந்திரன் மற்றும் பெருமாள் ஆகியோர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement