பஞ்சாப்பில் கபடி போட்டிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளனர் : தமிழக அரசு
04:25 PM Jan 24, 2025 IST
Share
Advertisement
சென்னை : பஞ்சாப்பில் கபடி போட்டிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கபடி பயிற்சியாளர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப்பிற்கு கபடி விளையாடச் சென்ற தமிழக மாணவிகளை பத்திரமாக தமிழகம் அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.