தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி; சென்னை, மதுரையில் இன்று துவக்கம்: இந்தியா முதல் போட்டியில் சிலியுடன் மோதல்

சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் இன்று தொடங்குகிறது. 21 வயதுக்குட்பட்டவருக்கான 14வது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை முதல்முறையாக தமிழ்நாடு பெற்று உள்ளது. இதுவரை 16 நாடுகள் பங்கேற்று வந்த நிலையில், முதல்முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடம் தலா ஒரு முறை மோத வேண்டும்.

Advertisement

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகளும், 2வது இடத்தை பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெறும். 2வது இடத்தை பிடிக்கும் மற்ற 4 அணிகாளும், 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் 9 முதல் 10வது இடத்துக்காக போட்டியில் மோதும். எஞ்சிய அணிகள் 17 முதல் 24 இடங்களுக்கு மோதும். டிச.2ம் தேதி வரை லீக் சுற்றுகள் நடைபெறும். 3ம் தேதி ஓய்வுநாளாகும். டிச.4ம் தேதி இருந்து நாக் அவுட் சுற்று நடைபெறுகிறது.

இந்த போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் நடைபெற உள்ளது. சென்னையில் 41 போட்டிகளும், மதுரையில் 31 போட்டிகளும் என மொத்தம் 72 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மதுரையில் நடக்கும் போட்டிகளில் ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்பது, நமிபியா, நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா ஆகிய 12 நாடுகள் பங்கேற்க உள்ளன. மற்ற நாடுகள் சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

2வபோட்டிகள காண சென்னையில் 2 ஆயிரம் பேரும், மதுரையில் 5,500 பேரும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டிகளை காண ரசிகர்கள் குவிவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மதியம் 1.15 மணிக்கு நடக்கும் தொடக்க போட்டியில் அர்ஜென்டினா-ஜப்பான் மோதுகின்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காலை 9 மணிக்கு தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி-தென் ஆப்ரிக்கா அணிகள் மோத உள்ளன. சென்னையில் இன்று இரவு 8.30 மணிக்கு இந்திய அணி தனது முதல் போட்டியில் சிலியுடன் மோதுகிறது. 29ம் தேதியுடன் ஓமனுடனும், டிச.2ம் தேதி சுவிட்சர்லாந்துடனும் இந்திய அணி மோத உள்ளது. இந்த உலகக்கோப்பை ஹாக்கி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா 3வது முறையாக சாதிக்குமா?

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி 1979ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக 2023ம் ஆண்டு மலேசியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனி கோப்பையை வென்றது. இதுவரை 13 உலகக்கோப்பை தொடர் நடந்து உள்ளது. இதில் ஜெர்மனி 7 முறை பட்டம் வென்று உள்ளது. இந்தியா மற்றும் அர்ஜென்டினா தலா 2 முறையும், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தலா ஒரு முறையும் உலகக்கோப்பையை கைப்பற்றி உள்ளன. இந்திய அணி முதல்முறையாக 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு, சொந்த மண்ணில் 2016ல் 2வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. தற்போது, மீண்டும் சொந்த மண்ணில் இந்திய அணி களமிறங்கி உள்ளதால், 3வது முறையாக உலகக்கோப்பையை வெல்லுமா? என்ற ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

டிக்கெட் இலவசம்

சென்னை மற்றும் மதுரையில் நடக்கும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்து உள்ளது. டிக்கெட்டை www.ticketgenie.in என்ற இணையதளத்திலோ அல்லது ஹாக்கி இந்தியாவின் அதிகாரப்பூர்வ செயலியிலோ பதிவு செய்யலாம். டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்க வரலாம். ஒரு நபருக்கு 4 டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

Advertisement