சிவில்/ எலக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு வாய்ப்பு
ஒன்றிய அரசின் கீழுள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணிகளுக்கு சிவில், எலக்ட்ரிக்கலில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் இன்ஜினியர்.
i) சிவில்- 7 இடங்கள். ii) எலக்ட்ரிக்கல்- 4 இடங்கள்.
வயது: 06.05.2026 தேதியின்படி 20 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும் சம்பளம்: ரூ.47,700. தகுதி: சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரி்ங் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரையில் நடைபெறும்.
கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (06.05.2026).



