Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வேலை

பீகார் மாநிலம், பாட்னாவில் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 8 நீதிபதிகள் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள வக்கீல்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மாவட்ட நீதிபதி (என்ட்ரி லெவல்).

மொத்த இடங்கள்: 8.

சம்பளம்: ரூ.1,44,840- ரூ.1,94,660.

வயது: 35 முதல் 50க்குள்.

தகுதி: விண்ணப்பதாரரர் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வக்கீல் அல்லது அரசு பிளீடர் மற்றும் பப்ளிக் புராசிகியூட்டராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 24 வழக்குகளில் ஆஜராகியிருப்பதோடு, தொடர்ந்து 3 ஆண்டுகளாக 72 வழக்குகளில் ஆஜராகியிருக்க வேண்டும். அதாவது 2025-26, 2024-25, 2023-24 ஆகிய 3 ஆண்டுகளில் தலா 24 வழக்குகள் ஆஜராகியிருப்பதாக விண்ணப்பத்தில் உறுதிமொழி தர வேண்டும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1,500/- (எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.750). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.patnahighcourt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.05.2026.