இந்திய ராணுவத்தில் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் பிரிவில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. பல்நோக்கு பணியாளர்: 5 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56.900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கண்காணிப்பாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்து 2 வருடங்கள் ஸ்டோர் கீப்பிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. லோயர் டிவிசன் கிளார்க்: 3 இடங்கள். சம்பளம்: ரூ.19,900- ரூ.83,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 லிருந்து 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும், எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது அறிவு/ஆங்கிலம்/நியூமரிக்கல் அப்டிடியூட் ஆகிய பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். www.indianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.04.2026.




