விளையாட்டு பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. ஹாக்கி (ஆண்): 1 இடம்- (மிட் பீல்டர்). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400/2,500.
2. ஹாக்கி (பெண்): 4 இடங்கள்- (டிபென்டர்-3, கோல்கீப்பர்-1). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
3. பளு தூக்குதல் (பெண்): 3 இடங்கள். (53 கிேலா-1, 63 கிலோ-1, 86 கிலோ-1). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
4. அதலெடிக்ஸ் (பெண்): 2 இடங்கள். (1- 800 மீட்டர் ஓட்டம், 1- டிஸ்கஸ் துரோ). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
5. கிராஸ் கன்ட்ரி (பெண்): 4 இடங்கள் (10 கி.மீ). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
6. அதலெடிக்ஸ் (ஆண்): 1 இடம் (1500 மீட்டர்). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,000 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
7. மல்யுத்தம் (ஆண்)- ப்ரீ ஸ்டைல்: 3 இடங்கள் ( 1- 57 கிலோ, 1-70 கிலோ, 1- 74 கிலோ). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800.
8. கால்பந்து (ஆண்): 3 இடங்கள் (1- லெப்ட் புல்பேக், 1- லெப்ட் விங்கர், 1- ரைட் விங்கர்-1). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
9. கிரிக்கெட் (ஆண்): 2 இடங்கள். (1- டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன், 1- வேகப்பந்து வீச்சாளர்). சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.
வயது: 01.07.2026 தேதியின்படி 18 முதல் 25க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ/பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/ பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது, மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு கூடுதல் தர ஊதியம் வழங்கப்படும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ரூ.250/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி, விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் கிளார்க்/டைப்பிஸ்ட்/ டெக்னீசியனாக பணியமர்த்தப்படுவர். 01.04.2023 தேதிக்கு பிந்தைய சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2026.


