Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

பணி: ஸ்போர்ட்ஸ் பெர்சன் (ஸ்போர்ட்ஸ் கோட்டா 2026-27).

மொத்த காலியிடங்கள்: 64.

விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:

அதலெடிக்ஸ்- 7, பேட்மிண்டன்-4, கிரிக்கெட்-4, கால்பந்து-2, கோ-கோ-6, டிரைவிங்-2, வாலிபால்-3, பவர்லிப்டிங்-4, குத்துச்சண்டை-4, வெயிட்லிப்டிங்-5, கூடைப்பந்து-4, ஜிம்னாஸ்டிக்ஸ்-2, ஹாக்கி-4, மல்யுத்தம்-2, நீச்சல்-2, பாடிபில்டிங்-2, சைக்கிளிங்-2, ஹேண்ட்பால்-4, வாட்டர்போலோ-1.

வயது: 01.01.2027 தேதியின்படி 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரயில்வே விதிமுறைப்படி வழங்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு/ஐடிஐ/பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப்பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு கூடுதல் தர ஊதியம் வழங்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அவர்கள் கிளார்க்/டைப்பிஸ்டாக பணியமர்த்தப்படுவர். 01.04.2026 தேதிக்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

www.rrc-wr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2026.