பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டெனோகிராபர் (கிரேடு-2): 1 இடம். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. வரி உதவியாளர்: (டேக்ஸ் அசிஸ்டென்ட்): 7 இடங்கள். சம்பளம்: ரூ. 25,500- ரூ.81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் கம்ப்யூட்டரில் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பல்நோக்கு பணியாளர்: 4 இடங்கள். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு பிரிவுகள்: வில்வித்தை, அதலெடிக்ஸ், அட்யா-பட்யா, பேட்மிண்டன், பால்-பேட்மிண்டன், பேஸ் பால், கூடைப்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்ஸ், பாடி பில்டிங், பாக்சிங், பிரிட்ஜ், கேரம், செஸ், கிரிக்கெட், சைக்கிளிங், சைக்கிள்போலோ, டெப் ஸ்போர்ட்ஸ், ஈக்கியூஸ்டிரியன், பென்சிங், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஐஸ்-ஹாக்கி, ஐஸ்-ஸ்கேட்டிங், ஐஸ்-ஸ்கீங், ஜூடோ, கபடி, கராத்தே, கயாக்கிங் மற்றும் கனோயிங், கோகோ, குடோ, முல்லஹாம்ப், மோட்டார் ஸ்போர்ட்ஸ், நெட்பால், பாரா ஸ்போர்ட்ஸ், பெனக்சிலாட், போலோ, பவர்லிப்டிங், துப்பாக்கி சுடுதல், ஷூட்டிங் பால், ரோல்பால், ரோலர் ஸ்கேட்டிங், ரோவிங், ரக்பி, ஷபக் டக்ரா, சாப்ட் பால், சாப்ட் டென்னிஸ், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிகாயிட், டென்னிஸ், டென்பின் பவுலிங், டிரையத்லான், டக் ஆப் வார், வாலிபால், வெயிட் லிப்டிங், உசூ, மல்யுத்தம், யாச்டிங், டென்னிஸ் பால் கிரிக்கெட், யோகாசனம்.
விளையாட்டு தகுதி: மேற்குறிப்பிட்ட விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் விளையாட்டு சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 31.03.2026 தேதிக்கு முந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
மருத்துவ தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
www.incometaxindia.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2026.

