Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கடற்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை

திட்டம்: அக்னிவீர்- எம்ஆர் (இசைக்கலைஞர்)- 02/2026.

சம்பளம்: முதல் வருடம் ரூ. 30 ஆயிரம், 2ம் வருடம் ரூ.33 ஆயிரம், மூன்றாம் வருடம் ரூ.36,500, 4ம் வருடம் ரூ.40,000.

வயது: 01.07.2004க்கும் 31.12.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கர்நாடிக்/ இந்துஸ்தானி ஆகிய இந்திய இசையில் முறையான பயிற்சி பெற்று ஏதாவதொரு இசைக்கருவியை சிறப்பாக வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது மேற்கத்திய இசையில் முறையான இசைப்பயிற்சி பெற்று ஏதாவதொரு இசைக்கருவியை நன்றாக வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.

உயரம்: ஆண்கள்/பெண்கள் இரு பாலரும் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், தலா 15 புஷ்அப்கள், சிட்அப்கள் எடுக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 15 ஸ்குவாட்ஸ், 10 சிட்அப்ஸ் மற்றும் புஷ்அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகள் ஜூன்/ஜூலை 2026ல் தேர்வு நடைபெறும். இதுபற்றிய முழுவிவரம் அட்மிட்கார்டு மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 4 வருடங்கள் இந்திய கடற்படையில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டதன் விவரம் ஜூலை, ஆகஸ்ட்டில் இணையதளத்தில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கடற்படை பயிற்சி ஓடிசாவிலுள்ள என்எஸ் சில்கா கடற்படை தளத்தில் தொடங்கும்.

எழுத்துத் தேர்வு பற்றிய விவரம் விண்ணப்பதாரர்களுக்கு இ. மெயிலில் தெரிவிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.60 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.04.2026.