பணி: சூபர்வைசர்.
i) மெக்கானிக்கல்: 11 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் சூபர்வைசராக 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வெல்டிங்/பிட்டர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் சூபர்வைசராக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) எலக்ட்ரிக்கல்: 3 இடங்கள். (பொது-2, ஒபிசி-1). தகுதி: எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் அல்லது எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் சூபர்வைசராக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) நிதி: 1 இடம் (பொது). தகுதி: வணிகவியல்/வணிக நிர்வாகம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 60% தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 45க்குள். சம்பளம்: ரூ.40,650/-. அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் விரிவான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.cochinshipyard.in அல்லது www.udupicsl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (22.04.2026).


