Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேங்க் ஆப் பரோடாவில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஸ்போர்ட்ஸ் பெர்சன்ஸ் (கிளரிக்கல் கேடர்):

மொத்த காலியிடங்கள்: 30.

விளையாட்டு வாரியாக காலியிடங்கள் விவரம்: (கிரிக்கெட்- ஆண்: 9, கபடி: ஆண்-6, பெண்-5, டேபிள் டென்னிஸ்: ஆண்-1, பெண்-1. கால்பந்து: ஆண்-8.

சம்பளம்: ரூ.24,050- ரூ.57,400.

வயது: 01.04.2026 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடியிருக்க வேண்டும். விளையாட்டில் சாதனை படைத்திருப்பது விரும்பத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை ரஞ்சி/துலிப். இரானி கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பின்னர் கிளார்க் பணி வழங்கப்படும். அவர்களுக்கு 6 மாதம் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு மற்றும் நேர்முகத் தேர்வின் போது அனைத்து சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இ.மெயில் மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு ரூ.175 மட்டும். www.bankofbaroda.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.05.2026.