1. ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (ஜேஆர்எப்): 6 இடங்கள். வயது: 28க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.37,000. தகுதி: ஏரோநாட்டிக்கல்/மெக்கானிக்கல்/ சிஎஸ்இ/இசிஇ ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ரிசர்ச் அசோசியேட் (ஆர்ஏ): 2 இடங்கள். சம்பளம்: ரூ.67,000. தகுதி: ஏரோநாட்டிக்கல்/மெக்கானிக்கல்/
எலக்ட்ரானிக்ஸ்/மெட்டீரியல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்இ/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 35க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி:
1. ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு: ஏப்.7 மற்றும் 8.
2. ரிசர்ச் அசோசியேட் பணிக்கு ஏப்.9.
இடம்: ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட், டிஆர்டிஓ, பெங்களூரு- 560075.




