பி.இ.,/எம்எஸ்சி படித்தவர்களுக்கு
பணி: எஸ்எஸ்சி ஆபீசர் (ஐடி- எக்சிக்யூட்டிவ் பிராஞ்ச்): 15 இடங்கள். வயது: 01.01.2002க்கும் 01.07.2007க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்/சைபர் செக்யூரிட்டி/ நெட்வொர்க்கிங்/ டேட்டா அனலிசிஸ் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவில் எம்எஸ்சி/எம்.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
பி.இ.,/பி.டெக்., அல்லது எம்எஸ்சி/எம்சிஏ/எம்.டெக்., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கேரளா, எழிமலா கடற்படை பயிற்சி மையத்தில் 2 வருட பயிற்சி வழங்கப்படும். ஜனவரி 2027ல் பயிற்சி தொடங்கும். இரண்டு வருட பயிற்சிக்குப் பின் மாதம் ரூ.56,100 சம்பளத்தில் சப்-லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.
www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.06.2026.



