பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் மெக்கானிக்: 8 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-ரூ.71,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக்ஸ்/மெக்கானிக் மிஷின் டூல் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. ஜூனியர் எலக்ட்ரீசியன்: 10 இடங்கள். சம்பளம்: ரூ.19,500- ரூ.71,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. அசிஸ்டென்ட் ஆப்செட் மிஷின் டெக்னீசியன்: 10 இடங்கள். சம்பளம்: ரூ.19,500- ரூ.71,900. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன்: 1 இடம். சம்பளம்: ரூ.19,500- ரூ.71,900. தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு 18 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/அருந்ததியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் டிரேடு தேர்வு/திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேரந்்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2026.
