பணியிடங்கள் விவரம்:
1. ஜூனியர் ரிசர்ச் பெல்லோ: 16 இடங்கள். சம்பளம்: ரூ.37,000. வயது: 28க்குள். தகுதி: இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்எஸ்சி பட்டம் பெற்று ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பட்டம் பெற்று ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ரிசர்ச் அசோசியேட்: 7 இடங்கள். சம்பளம்: ரூ.67,000. வயது: 35க்குள்.
தகுதி: இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.ஹெச்டி பட்டம் அல்லது எம்.இ.,/எம்.டெக்., படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு 1.9.2026 முதல் 9.9.2026 வரை நடைபெறும்.
www.drdo.gov.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் பயோடேட்டாவை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது கொண்டு வர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 1.9.2026 முதல் 9.9.2026 வரை.



