ராஞ்சி: ஜார்க்கண்டில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்ஐஆர்) ஜூன் மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூலை 29ம் தேதி வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குவதற்கு முன் 2.64கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கையானது தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் 2.21கோடியாக குறைந்துள்ளது.
இதில் 1.12கோடி ஆண்கள், 1.08கோடி பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 260 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 43,61,187 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.இதில் சுமார் 7.63லட்சம் பேர் இறந்துவிட்டனர். 15.92லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர்.
