ஜார்க்கண்டில் என்கவுன்டர் ஜேஜேஎம்பி தலைவர் லோஹ்ரா உட்பட 2 மாவேயிஸ்ட்கள் பலி
Advertisement
இதனை தொடர்ந்து சிஆர்பிஎப் மற்றும் ஜார்க்கண்ட் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் லோஹ்ரா உட்பட இரண்டு மாவோயிஸ்ட்டுக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்து லோஹ்ரா மற்றும் கஞ்சு ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதில் காயமடைந்த நிலையில் கைதான ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரர் அவாத் சிங் விமானம் மூலமாக ராஞ்சி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement