Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை. தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது.

இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 3 நாளில் பவுனுக்கு ரூ.22,800 குறைந்து சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 நாள் சரிவுக்கு பிறகு, தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.2560 உயர்ந்து ரூ.1,12,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கு விற்பனையானது.

இதனை தொடர்ந்து சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனை

வெள்ளி விலை நிலவரம்

இந்தாண்டில் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 30ம் தேதி முதல் 3 நாட்களில் கிலோவுக்கு ரூ.1.25 லட்சம் வரை சரிந்தது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி, சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280 க்கு விற்பனை செய்யப்பட்டது, தொடர்ந்து மாலையில் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒருகிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனை செய்யப்படுகிறது.