ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் டிராக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் மல்டி ஜெட் 2 டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 170 எச்பி பவரையம், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவில் முதல் முறையாக 9 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் உள்ளது. கூடுதலாக, ஜீப்பின் செலக் - டெரைன் அமைப்பு அனைத்து நிலப்பரப்புகளிலும் சிறந்த செயல்திறனை உறுதி செய்கிறது. மெரிடியன் ஓவர்லாந்தை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 சீட்கள் உள்ளன. 3 வரிசைகள் உள்ளன. அதிக இட வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிரில், பேட்ஜ்கள் மற்றும் வெளிப்புற மோல்டிங்குகளில் பியானோ பிளாக் வண்ண வேலைப்பாடுகள் உள்ளன. 18 அங்குல அலாய் வீல்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ, 10.1 அங்குல யு கனெக்ட் 5, 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் ஆல்பைன் ஆடியோ அமைப்பு, பனோரமிக் சன்ரூப், மெமரி வசதியுடன் கூடிய வெண்டிலேட் சீட்கள், அடாஸ் 2 உட்பட 10க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் 2 வேரியண்ட்கள் உள்ளன. ஆட்டோமேட்டிக் வேரியண்டில் டிராக் எடிஷன் சுமார் ரூ.35.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓவர் லேண்ட் வேரியண்ட்டை விட சுமார் ரூ.34,000 அதிகம்.
இதுபோல் ஆட்டோமேட்டிக் ஆல் வீல் டிரைவ் ஷோரூம் விலை சுமார் ரூ.37.82 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓவர் லேண்ட் வேரியண்டை விட சுமார் ரூ.34,000 அதிகம். கூடுதலாக ஏஎக்ஸ் எஸ் பேக் ரூ.9,200 உடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


