சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 12 பேர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமான ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷ் கொலை உள்பட 13 வழக்குகள் கொண்ட ஜெயபால், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். திருமழிசையில் பதுங்கியிருந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க திட்டம் தீட்டுவதாக கிடைத்த தகவலை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளவேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
+
Advertisement
