சென்னை: தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார் நடிகர் ெஜயம் ரவி. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இனி நான் ரவி அல்லது ரவி மோகன் என அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் இனி எனது தனிப்பட்ட வாழ்க்கை, திரைத்துறை கனவுகளை முன்னெடுத்து செல்லும். எனவே இனி யாரும் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம்.
திரைத்துறை மீதான அளவற்ற அன்பின் காரணமாக, ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இதில் திறமையாளர்களுக்கு வாய்ப்பு தருவேன். அதேபோல் சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய எனது ரசிகர் மன்றத்தை ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றுகிறேன். எனது புதிய துவக்கத்திற்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ஜெயம் ரவி கூறியுள்ளார்.


