Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தன் படத்திற்காக ஜெ.விடம் கைகட்டி நின்றவர் விஜய்: சரத்குமார் காட்டம்

கோவை: கோவையில் நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்சார் போர்டு தற்போது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை. இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தி உள்ளார்கள். இது ‘தக் லைப்’ படத்திற்கும் நடந்தது. அதற்கு முன்பு அவரது படத்திற்காக ஜெயலலிதாவிடம் விஜய் கைகட்டி நின்றார். தணிக்கை சான்றிதழ் தருவதில் அரசியல் இல்லை.

அனைத்தும் அரசியல் ரீதியாகவேதான் நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.‘பராசக்தி’ திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்றுதான் வந்தது. அதை விட்டுவிட்டு ‘ஜனநாயகன்’ படத்தை எல்லாம் பற்றி பேசுவது ‘வேஸ்ட்’. இவ்வாறு அவர் கூறினார்.