தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24ம் தேதி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா: பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு

மன்னார்குடி: ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக- பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார். அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு, பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் எடப்பாடியின் விடாப்பிடியான எதிர்ப்பு காரணமாக சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறவில்லை.

Advertisement

இந்த சூழ்நிலையில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சசிகலா விரும்புகிறார். அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார். இதனிடையே நேற்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனிக்கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் பிப். 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகும். அந்த நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளாராம். ராமநாதபுரம் அல்லது மதுரையில் ஏதேனும் ஒரு இடத்தில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி சசிகலா வட்டாரத்தில் விசாரித்த போது, முதல்வர் பதவி வழங்கிய சசிகலாவுக்கே எடப்பாடி துரோகம் செய்து விட்டார். அந்த துரோக பட்டியலில் தினகரன், ஓபிஎஸ்சும் இணைந்து விட்டனர். இந்த சூழ்நிலையில் தனிக்கட்சி துவங்கி, அரசியலில் தனது பலத்தை நிரூபிக்க சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்ய தனது தம்பி திவாகரனின் மகன் மற்றும் தனது கணவர் நடராஜனின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை சசிகலா வெளியிடுவார். மேலும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவிலும் சசிகலா உள்ளார். இது தொடர்பாக விஜய் தரப்பிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட சசிகலா முடிவு செய்துள்ளார். சசிகலாவும் தனக்கு சாதகமான ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளார்.

Advertisement

Related News