ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், ஜாவா 42 பைக்கில் புதிய ஐவரி எடிஷன் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 294 சிசி லிக்விட் கூல்டு ஜெ பாந்தர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 32 பிஎஸ் பவரையும், 26.84 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 350 சிசி மோட்டார் சைக்கிளை விட 40 சதவீதம் அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியது என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. நியூ கிளாஸ் வரிசையில் இந்த புதிய ஐவரி வண்ணத்தை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இந்த இந்த பைக் வண்ணங்களில் கிடைக்கும். புதிய ஐவரி எடிஷன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
