ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களுக்கு மேலே பாகிஸ்தான் டிரோன் பறந்ததை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். ஹிரானகர் பிரிவில் உள்ள சுக்மல், தேவிந்திரா மற்றும் தபன் ஆகிய கிராமங்களுக்கு மேலே பிற்பகல் சுமார் 2 மணி அளவில் டிரோன் பறந்தது. அந்த டிரோனை சுட்டு வீழ்த்துவதற்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் முயற்சித்தனர்.
ஆனால் அதிக உயரத்தில் பறந்த டிரோன் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த டிரோன் மூலமாக ஆயுதங்கள், போதைப்பொருட்கள் ஏதேனும் வீசப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக வீரர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

