ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு கார், பைக்குகள் பரிசு
Advertisement
தமிழ்நாடு துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டிகளை துவக்கி வைக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் மாடுபிடி விரருக்கும்,மாட்டின் உரிமையாளர்களுக்கும் தலா ஒரு மாருதி ஷிப்ட் கார்,இரண்டாம் பரிசாக பைக்,மூன்றாம் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டியும் வழங்கப்பட உள்ளது.அதுமட்டுமின்றி இதில் வெற்றி பெறுபவர்களுக்கும், மாடுகளுக்கும் தங்க நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதலே மாடுகளும், மாடுபிடி வீரர்களும் மைதானம் அருகே குவிந்துள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளையும் போட்டி நடைபெறும் மைதானத்தையும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
Advertisement