நியூயார்க்: கனடாவில் நடந்த ஜி-7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, அமெரிக்கா நியூயார்க்கில் ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். தற்போதைய உலக ஒழுங்கு மற்றும் பலதரப்புக்கான தாக்கங்கள் குறித்த ஐநா பொது செயலாளரின் மதிப்பீட்டை மதிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
+
Advertisement
