Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஊழல் வழக்கில் ஜாமீன் பெற உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்த சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டு சிறை: டெல்லி நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது மண்டோலி சிறையில் உள்ளனர். இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் மீது இருந்த ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூனம் சௌத்ரி கடந்த 26ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தார். அதாவது ஊழல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி போன்று ஆள்மாறாட்டம் செய்ய விவகாரத்தில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் தீஸ் ஹசாரி மாவட்ட தலைமை நீதிமன்ற குற்றவியல் நடுவர் ஹர்ஷிதா நேற்று தண்டனை விவரங்களை வழங்கினார். அதில்,‘‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி போல் ஆள்மாறாட்டம் செய்து, நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்து ஜாமீன் பெற முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது. அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்கும், அரசு ஊழியரை மிரட்டியதற்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அதேப்போன்று மிரட்டலுக்காக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்தத் தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக, ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.