இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!
டெல்லி: இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக் குழுதான் என குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றது, ஆதாரமற்றது. உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தனது சொந்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, இந்தியாவுக்கு எதிராக தவறான கட்டுக் கதைகளை சுமத்துவதே பாகிஸ்தானின் தந்திரம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
