Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

அமெரிக்க அதிபருக்கு பின்னடைவு.!! விரைவில் முடிவடைய உள்ள ஈரான் போர்.!

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறும் தீர்மானம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், போர் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை மீறி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். குறிப்பாக வெனிசுலா மீது அவர் எடுத்த ராணுவ நடவடிக்கையும், ஈரான் மீதான அவரது போர் நடவடிக்கையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற கீழ் அவையில் ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் மேல் அவையிலும் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த தீர்மானம் அங்கும் நிறைவேற்றப்பட்டால் அது உடனடியாக சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேல் அவையில் மொத்தமுள்ள 100 இடங்களில் ட்ரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 இடங்களும் உள்ளன. கீழ் அவையில் குடியரசு கட்சிக்கு பெருபான்மை இருந்தாலும், எனினும் டிரம்ப் கட்சியை சேர்ந்த பலர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். எனவே மேல் அவையிலும் இதே போல டிரம்ப் கட்சியினர் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் சபையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வேறுவழியின்றி டிரம்ப், ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.