Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் 1 முறை தாக்கினால் 20 முறை பதிலுக்கு தாக்குதல் நடத்துவோம் - ட்ரம்ப் ஆவேசம்

வாஷிங்டன்: ஈரான் ஒரு முறை தாக்கினால், நாங்கள் ஈரான் மீது 20 முறை தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்து உள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின் குண்டுவீச்சும் கணிசமாக அதிகரிக்கும் என்பதை மேற்கண்ட எச்சரிக்கை மூலம் கூறி இருக்கிறார்.

அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது. ஈரானில் உள்ள ஒரு இடத்தில் குண்டுவீச்சு நடந்ததைக் காட்டும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ட்ரம்ப், "இது, ஈரான் நேற்று கப்பல்கள் மீது நடத்திய குண்டுவீச்சுக்கான எங்களின் பழிவாங்கும் செயலாகும். இது போல மீண்டும் நடந்தால், நிலைமை இன்னும் மிகவும் மோசமாகிவிடும்!" என்று பதிவிட்டு உள்ளார்.

இதனிடையே நேட்டோ (NATO) உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தில் திரும்பிய போது, ​​செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "நாங்கள் அவர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினோம்; சொல்லப்போனால், அவர்கள் நடத்திய தாக்குதலைப் போல 20 மடங்கு பலமான பதிலடியை நாங்கள் கொடுத்தோம். அவர்கள் அத்துமீறி தாக்கும் போதெல்லாம், நாங்கள் அவர்களுக்கு 20 மடங்கு பதிலடி கொடுப்போம்," என்று கூறினார்.