Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தாலும், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான் முயற்சித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் அந்நாட்டின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக, ஈரான் புரட்சிகர ராணுவமும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு தயாராகும் வரை தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை மூலம் தற்போதைய நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அதில் ஈரான் ஆர்வம் காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சர்வதேச நீர்வழிப் பாதையை மத்திய கிழக்கு நாடு ஒன்று கட்டுப்படுத்த முயற்சிப்பதை அனுமதித்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் ரூபியோ எச்சரித்தார்.அமெரிக்கா–ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் உலகளாவிய எரிசக்தி வழித்தடத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கான தீர்வு காண்பதில் ஈரான் தாமதம் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நீடித்து வருவது, தங்கள் பிராந்தியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆசியான் நாடுகள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.