Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் தாக்குதலால் குவைத் விமான நிலையம் மூடல்

குவைத்: ஈரான் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து விமான சேவைகள் நிறுத்தபட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

குவைத் விமான நிலையத்தின் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் விமான நிலையத்தின் பல மின்னணு வசதிகள் கடுமையாக சேதமடைந்தது. தாக்குதலில் சிலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலை தொடர்ந்து அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சர்வதேச பயணிகள் முனையம் 1 தற்போது மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் இதனால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.