மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 21ம் தேதி துவங்கும் என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று அறிவித்தார். இறுதிப் போட்டி மே 25ம் தேதி நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போட்டிகளில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த தொடருக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம், கடந்தாண்டு நவ. 24, 25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்தது. ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். வெளிநாடுகளை சேர்ந்த 62 பேர் உட்பட 182 வீரர்கள் ரூ.639 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள், 2 மாதங்களாக நடைபெற உள்ளன.
Advertisement


