மேக்ஸ்வெல் இல்லாத ஐபிஎல்: ரசிகர்கள் அதிர்ச்சி
துபாய்: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ள நிலையில், மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்தநிலையில் மினி ஏலத்தில் பங்கேற்க இதுவரை 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் 10 அணிகளும் சேர்ந்து 77 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும்,சென்னை அணியிடம் ரூ.43.40 கோடியும் உள்ளது. இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வந்த ஆண்ட்ரே ரசல், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
தற்போது மேக்ஸ்வெல்லும் ஏலத்தில் பங்கேற்க தனது பெயரை பதிவு செய்யாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போடலாம் என தெரிகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அணிக்காக விளையாடி வந்த க்ளென் மேக்ஸ்வெல் நடப்பாண்டில் பங்கேற்காத காரணம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.