தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎல் 4வது லீக் போட்டி டெல்லி அசாத்திய வெற்றி: அசுதோஷ் சர்மா விஸ்வரூபம்

Advertisement

விசாகப்பட்டின: ஐபிஎல் 4வது லீக் போட்டியில் நேற்று டெல்லி அணி லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது சீசன் தொடரின் 4வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று, லக்னோ - டெல்லி அணிகள் இடையே நடந்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி துவக்க வீரர்கள், துவக்கம் முதல் அடித்து ஆட ஆரம்பித்தனர். 5வது ஓவரில் முதல் விக்கெட்டாக அய்டன் மார்க்ரம் 15 ரன்னில் அவுட்டானார். பின் வந்த நிகோலஸ் பூரன், மற்றொரு துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் உடன் சேர்ந்து டெல்லி பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்திருந்த நிலையில், மார்ஷ் (72 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். பின், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். 13வது ஓவரை சந்தித்த பூரன், விஸ்வரூபம் எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர், 30 பந்தில் 75 (7 சிக்சர், 6 பவுண்டரி) ரன் எடுத்து அவுட்டானார். பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் லக்னோ, 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்திருந்தது. அதையடுத்து, 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்கத்தில் ஆடிய வீரர்கள் சொதப்பியதால் 113 ரன்னுக்குள் 6 விக்கெட் சரிந்தது. இருப்பினும் அசுதோஷ் சர்மாவும், விப்ரஜ் நிகாமும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். அதனால் 19.3 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்து டெல்லி அசாத்திய வெற்றி பெற்றது. அசுதோஷ் 31 பந்துகளில் 66 ரன் எடுத்து அவுட் ஆகாமல், அணியை வெற்றி பெறச் செய்தார்.

Advertisement

Related News