தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிரடி நாயகர்களை வளைக்க அணிகள் ஆர்வம் ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பெற்ற 350 வீரர்கள்: அபுதாபியில் டிச.16ல் மினி ஏலம்

 

Advertisement

அபுதாபி: ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கான மினி ஏலத்தில் இடம் பெறும் 350 பேரின் பட்டியல் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்தது.  வரும் 2026ல் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கான ஏலம் வரும் 16ம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இடம்பெறுவதற்காக 1390 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து, 1040 பெயர்கள் நீக்கப்பட்டு, 350 பெயர்களை மட்டும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகம் தேர்ந்தெடுத்து, ஏலத்தில் பட்டியலிட முடிவு செய்துள்ளது.

அவர்களில் 240 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 110 பேர் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்களில் 224 பேர், தேசிய அணிக்காக இதுவரை ஆடாத அன்கேப்டு வீரர்கள். அதேபோல், வெளிநாடுகளை சேர்ந்தோரில், 14 பேர் அன்கேப்டு வீரர்களாக உள்ளனர். ஐபிஎல் தெரிவு செய்துள்ள 350 வீரர்கள் பட்டியலில் இருந்து, ஏலத்தின்போது, ஐபிஎல் அணிகள், 77 வீரர்களை தேர்வு செய்ய போட்டியிடும். இந்த வீரர்களில் 31 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பர்.

ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச ரிசர்வ் தொகை ரூ. 2 கோடி. இந்த வகையில், 40 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவர். அதிகபட்ச ஏல ரிசர்வ் தொகை கொண்ட வீரர்களில் நியூசிலாந்தின் டெவான் கான்வே, ஃபின் ஆலன், ஜேகப் டஃபி, மேட் ஹென்றி, ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர், கேமரூன் கிரீன், இங்கிலாந்தின் கஸ் அட்கிட்சன், லியாம் லிவிங்ஸ்டோன், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர், ரச்சின் ரவீந்திரா, ஜெரால்ட் கோட்ஸீ, அன்ரிச் நார்ட்ஜீ, இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய், இலங்கையின் மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா, வனிந்து ஹசரங்கா உள்ளிட்டோர் உள்ளனர்.

இப்பட்டியலில் திருநெல்வேலியை சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கருக்கு, ஏல ரிசர்வ் தொகை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படாத சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள், இந்த ஏலத்தில் அதிரடி நாயகர்களை வளைத்து போட தயார் நிலையில் உள்ளன.

 

Advertisement