சென்னை, ஆக. 18: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் மது போதையால் ஏற்பட்ட மோதலில் சந்துரு, விக்கி என்ற நீலகண்டன் ஆகிய 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் ராதா என்ற பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கத்தை வேகமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement



