Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிக இளம் இந்திய வீரர்: சச்சின் சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்கியது.

இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கமிறங்காத நிலையில், நடைபெற்று வரும் 2வது டி20 போட்டியில் களம் இறங்கியதன் மூலம், இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் அறிமுகமான மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

வெறும் 15 வயது 99 நாட்களில் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ள வைபவ், 1989-இல் 16 வயதில் அறிமுகமான மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டுக்கால சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கவனத்தை ஈர்த்த இந்த இளம் இடதுகை தொடக்க ஆட்டக்காரரின் சர்வதேச கிரிக்கெட் வருகைக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.