நவம்பர் 27ம் தேதியை சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக அறிவித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
நவம்பர் 27 ஆம் தேதியை சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக அறிவித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சியேரா லியோனிக் குடியரசு கொண்டுவந்த இத்தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 65 நாடுகள் இணைந்து வழிமொழிந்தன; 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபை, இத்தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.

