மதுரை: கரூரில் 3,085 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. தவெக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது; கரூர் கோயில் நில விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இவ்வளவு முக்கியத்துவம் தர காரணம் என்ன? பத்திரப்பதிவு செய்தால் நாளை மற்றொரு தரப்பு இடத்தை வாங்கி ஏமாறக்கூடும். கரூர் எல்லா விவகாரத்திலும் தற்போது பிரபலமாகி வருகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
+
Advertisement


