Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு இனி எரிபொருள் இல்லை: முன்னோடி திட்டத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சாலை விபத்து காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என்ற போதிலும், அதைச் சரியாகப் பின்பற்றுவதில்லை.

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின்படி, இந்தியச் சாலைகளில் இயங்கும் வாகனங்களில் கிட்டத்தட்ட 56 சதவீதம் காப்பீடு செய்யப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனால், செல்லுபடியாகும் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்க மறுக்கும் முன்னோடி திட்டத்தை ஒன்றிய அரசு உருவாக்க வேண்டும். எரிபொருள் மறுக்கப்படும் இந்த நடவடிக்கை இருமடங்கு பலனைத் தரும்.

முதலாவதாக காப்பீடு இல்லாத அல்லது பதிவு செய்யப்படாத வாகனங்களைக் கண்டறிய உதவும், இரண்டாவதாக வாகன உரிமையாளர்கள் காப்பீட்டைப் பெற தூண்டும். தற்போது மாநிலக் காவல்துறையிடம் வாகனங்களின் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்கச் சீரான எந்தவொரு அமைப்பும் இல்லை. இதற்காக காவல்துறையினருக்குக் கையடக்கக் கருவிகள் அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகளை வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.