வேகமாக கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்
Advertisement
காரில் அவரது தந்தை, சகோதரி மற்றும் சகோதரி குழந்தைகள் இருந்தனர். சாலையில் கார் விபத்து ஏற்பட்டதில் என்.எஸ். ரவிஷா மட்டும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது சடப்பூர்வ வாரிசுதாரர்கள் இழப்பீடு கேட்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், கவனக்குறையாக, மிக வேகமாக காரை ஓட்டி, சாலையில் கவிழ்த்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் எந்தவிதமாக இழப்பீடும் சட்டபூர்வ வாரிசுதாரர் பெற முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
Advertisement