Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை மாணவர்களுக்கு விற்கக்கூடாது

சென்னை: அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவில் 4ல் ஒருவருக்கு உடல்பருமன், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை போன்ற பாதிப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஆரோக்கியத்தை காக்கவேண்டியது அவசியமாகும். அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

அதேநேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.