Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்

புதுடெல்லி: உலகம் முழுவதும் ஏராளமானோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளது. இதுதொடர்பாக பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில்தான் அந்த பிரச்னையை சரிசெய்வது எப்படி? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் முடங்கியதாகவும், சாரி சம்திங் வென்ட் ராங் என்று வருவதாகவும் பலரும் டிராக்கிங் இணையதளமான டவுன் டிடெக்டரில் (Downdetector) பதிவிட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த புகாரை பதிவு செய்தனர். இந்த பிரச்னைக்கான காரணத்தை இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா விளக்கவில்லை.

இந்நிலையில்தான் இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி ரெடிட்வலைதள பக்கத்தில் ஒருவர் கூறியுள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராமில் சஃபாரிக்கு சென்று பிரைவேட் மோடை ஆன் செய்யவும். அதன்பிறகு இன்ஸ்டாகிராமை தேடி கேன்சல் என்பதை கிளிக் செய்து இணையதளத்துக்கு செல்ல வேண்டும். மீண்டும் இன்ஸ்டாகிராமுக்குள் செல்ல வேண்டும். அப்படி செய்தால் பிரச்னை சரியாகிவிடும். இல்லாவிட்டால் 2 அல்லது 3 முறை ரெப்ரெஷ் செய்தால் இன்ஸ்டாகிராம் செயலியின் வலது பக்கத்தில் உள்ள ப்ளூ பட்டனை அழுத்தினால் பிரச்னை சரியாகும். இல்லாவிட்டால் இன்ஸ்டாகிராம் செயலியை மீண்டும் டவுன்லோட் செய்து இணையதளத்துக்கு சென்று திறக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.