Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் ராகுல்காந்தி செயல்படுகிறார்: பாஜ விமர்சனம்

பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூரில் பாஜ சார்பில் ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் பாஜ தலைவர் நிதின்நபின் பேசினார். அப்போது அவர், ‘‘ இந்தியாவில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்காக வெளிநாடுகளின் ஆதரவு கொண்ட ஒரு டூல்கிட் மூலம் ராகுல்காந்தி பயன்படுத்தப்படுகிறார். அவர் வெளிநாட்டு சக்திகளின் கட்டளைப்படி நாட்டில் அராஜகத்தை உருவாக்குவதற்காக செயல்படுகிறார். நமது நாடு அரசியலமைப்பின்படி தான் இயங்குகிறது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

2025 சட்டமன்ற தேர்தல்களில் பீகார் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த பாடம் புகட்டினார்கள். அவர்கள் அவமானகரமான தோல்வியை சந்தித்தனர். எதிர்க்கட்சிகள் தாங்கள் தேர்தலில் தோற்கும்போது மட்டுமே தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்புகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமான தேர்தல் நடைமுறைகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஆனால் தாங்கள் வெற்றி பெறும்போது தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்கின்றன” என்றார்.