Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2வது இன்னிங்சில் கிழக்கு மண்டலம் 212/5: 584 ரன் முன்னிலை

சென்னை: தென் மண்டல அணியுடனான துலீப் கோப்பை பைனலில், கிழக்கு மண்டலம் வலுவான முன்னிலை பெற்றுள்ளதால் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்டலம் 708 ரன் குவித்த நிலையில் (இஷான் 270, குஷக்ரா 101, மோகன் 85, ஈஸ்வரன் 72), தென் மண்டல அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் திலக் வர்மா 56 ரன், சாமா மிலிந்த் 2 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தது. மிலிந்த் 43 ரன் எடுத்து மோகன் பந்துவீச்சில் கராமி வசம் பிடிபட்டார். அடுத்து வந்த விஜய், சிராஜ் இருவரும் தலா 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். திலக் வர்மா 99 ரன் (211 பந்து, 9 பவுண்டரி) விளாசி குரேஷி பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தென் மண்டலம் 107.3 ஓவரில் 336 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

நிதீஷ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். கிழக்கு மண்டல பந்துவீச்சில் முகேஷ் குமார் 3, ஷமி, குரேஷி, மோகன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் 372 ரன் முன்னிலை பெற்றாலும் ஃபாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டலம் 4ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் சூரியவன்ஷி 8 ரன், ஈஸ்வரன் 3 ரன்னில் வெளியேறிய நிலையில்ஞ் ஷிகர் மோகன் 52 ரன், கேப்டன் இஷான் 80 ரன் விளாசி அசத்தினர்.

கராமி 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். குஷக்ரா 34 ரன், குரேஷி 26 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கிழக்கு மண்டலம் கைவசம் 5 விக்கெட் இருக்க 584 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இதனால் போட்டி டிராவில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகி உள்ளது.