Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: வினாடிக்கு 400 கன அடியாக உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 26.57 அடி உயரத்துக்கும் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 1073 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம் நீர்வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 286 கன அடி வீதமும் பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 16 கன அடி வீதமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 17.71 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2,071 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 159 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 12.99 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1711 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 245 கன அடியாக உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 182

3 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 1.66 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 96 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

இதுபோல், கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 28.90 அடி உயரத்திற்கும் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 262 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 4 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 5,182 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.